January 25, 2015
கைரலி அரேபியா(KAIRALI ARABIA TV) புதிய மலையாளம் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17@66.0Eயில் தொடக்கம்
கேரளா மாநிலத்தின் மலையாளம் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மிக பிரபலமான பொழுது போக்கு தொலைக்காட்சிகளான கைரலி டிவியின் நிகழ்ச்சிகள் வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளம் மக்கள் காணும் வகையில் அந்நிறுவனத்தில் இருந்து புதிதாக கைரலி அரேபியா என்ற பெயரில் புதிய தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனா்.இப்புதிய தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு சென்னை டெலிஸ்பாட் நிறுவனத்தின் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் இத்தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதி அரசிடம் கிடைக்கபெற்ற பிறகு ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதே செயற்கைகோள் அலைவரிசையில் அந்நிறுவனத்தின் ஏனைய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகுவது குறிப்பிடதக்கது.கேரளா மாநிலத்தை பொறுத்தமட்டிலும் வளைகுடா நாடுகளில் வாழும் மக்கள் நிகழ்ச்சிகளை கானும் வகையில் மற்ற நிறுவனங்களும் இது போன்று தொலைக்காட்சிகளை தொடங்கியிருப்பது குறிப்பிடதக்கது.அனைத்து தொலைக்காட்சிகளும் இலவச ஒளிபரப்பாக வலம் வருகிறது.வேளைகுடா மக்கள் தொலைக்காட்சியினை பெற குறைந்தபட்சம் 6 முதல் 8 அடி சிபேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணலாம்.
Satellite Intelsat17@66.0 East
Freq Rate 4015
Symbol Rate 30000
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment