டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

November 13, 2015

சாய்ராம் டிவி (SAIRAM TV) புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் இன்டல்சாட்17யில் உதயம்


நண்பர்களே தமிழகத்தின் புதிய பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி சாய்ராம் டிவி என்ற பெயரில் உதயமாகியுள்ளது.சாய்ராம் டிவியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.சென்னையை மையமாக கொண்டு செயல்படும் 
சாய்ராம் இன்ஸ்டியூட் கல்வி நிறுவனத்தின் சார்பாக இத்தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் சேனாங்கோட்டையில் செயல்படும் சாய்ராம் தொழிற்பயிற்ச்சிகூடமும் சாய்ராம் தொலைக்காட்சியின் அங்கமாகும்.சாய்ராம் டிவிக்கான செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமம் கடந்த வருடத்தில் வழங்கப்பட்டது.தொலைக்காட்சியின் 24 மணிநேர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்படலாம்.சாய்ராம் டிவியின் ஒளிபரப்பு டாடா கம்னியூகேஷன் நிறுவனத்தின் சென்னை டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்படுகிறது.தொலைக்காட்சியி்ன் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் மிக எளிய தொழில்நுட்ப வசதி கொண்ட MPEG4/DVB S செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.சாய்ராம் தொலைக்காட்சி இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3845
Symbol Rate 27689
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s
Mode Fta

No comments:

Post a Comment