நண்பர்களே இந்திய அரசின் பொது தொலைக்காட்சி சேவையான பிரசார் பாரதியின் டிடி நேஷனல் டிடி ஹெச்டி டிடி நியூஸ் டிடி ஸ்போர்ட்ஸ் டிடி பாரதி டிடி கிஷான் மற்றும் சில டிடி தொலைக்காட்சிகளின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளான ஜிசாட்10யில் தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட இப்புதிய செயற்கைகோளில் இந்தியா அரசின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்சாட்3எ செயற்கைகோளில் ஒளிபரப்பை வழங்கி வந்தநிலையில் அச்செயற்கைகோளின் பயன்பாடு முடிவடையும் நிலையில் இப்புதிய செயற்கைகோளுக்கு தொலைக்காட்சிகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதே அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பை அந்தமான் தீவுகளுக்கான டிடி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு இடைநிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள புதிய அலைவரிசையின் சிக்னல் 6 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கும்.மேலும் எளிய தொழில்நுட்ப வசதியுடைய MPEG2/DVB S1 செட் டாப் பாக்ஸ்யில் தொலைக்காட்சிகளை காணலாம்.விரைவில் மற்ற மாநில மொழி டிடி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பும் ஜிசாட்10 செயற்கைகோளில் தொடங்கலாம்.இப்புதிய ஒளிபரப்பு வளைகுடா மற்றும் கிழக்காசியா போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும்.துர்தர்ஷனின் அதிநவின தொலைக்காட்சியான டிடி ஹெச்டிம் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
Satellite GSAT10@83.0E(C BAND)
Freq Rate 3885
Symbol Rate 27500
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s1
Mode FTA
Satellite GSAT10@83.0E(C BAND)
Freq Rate 3885
Symbol Rate 27500
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s1
Mode FTA
No comments:
Post a Comment