November 22, 2015
D2H லைப் 4கே(D2H LIFE UHD 4K) புதிய அல்ட்ர யூஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு ST2@88.0E தொடக்கம்
நண்பர்களே இந்தியாவின் மிக பிரபலமான டிடி ஹெச் சேவையான வீடியோகான் டிடிஎச் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவிற்கான அதிநவின தொலைக்காட்சியான D2H லைப் அல்ட்ரா ஹெச்டி 4கே என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இந்தியாவில் அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி தொடங்கிய முதல் டிடிஎச் நிறுவனம்
இதுவாகும்.தற்சமயம் இலவச ஒளிபரப்பாக எஸ்டி2 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.மிக தெளிவான விடியோ மற்றும் ஆடியோ தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இந்தியாவை பொருத்தமட்டிலும் கடந்த வருடம் முதல் சில முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என்று புதிய ஹெச்டி தொலைக்காட்சிகளை தொடங்கி வருகின்றனர்.அவ்வரிசையில் டிடிஎச் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை நிறுவனங்களின் சார்பாக தற்சமய காலங்களில் தொடங்கி வருவது குறிப்பிடதக்கது.D2H லைப் 4கே தொலைக்காட்சி தற்காலிக சோதனை ஒளிபரப்பின் அடிப்படையில் இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ளது.எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றப்படலாம்
அலைவரிசை விபரங்கள்:
Satellite ST2@88.0E(KU BAND)
Freq Rate 11483
Symbol Rate 44997
Polar Horizontal
Modulation HEVC/UHD MPEG4/DVB S2
Mode FTA
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment