November 11, 2014
எபிக் டிவி ஹெச்டி( EPIC TV HD HIINDI)புதிய இந்தி பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5Eயில் தொடக்கம்
இந்தியாவின் வடமாநில மக்களின் பொழுது தொலைக்காட்சிகளின் வரிசையில் இந்தி மொழியில் 24 மணிநேர பொழுது போக்கு தொலைக்காட்சி அதிநவின உயா்தர தொழில்நுட்பமான ஹெச்டி வடிவில் எபிக் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதல் பொழுது போக்கு தொலைக்காட்சியாக எபிக் டிவி என்ற பெயரில் புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஈசல் சியாம் டெலிஸ்பாட் ஒளிபரப்பு நிறுவனத்தின் அலைவரிசையில் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளின் 24 மணி நேர ஒளிபரப்பு நவம்பா் 19 திகதி முதல் தொடக்கப்பட வுள்ளது.வரலாற்று புராண தொடா்கள்.மாயஜால திகில் தொடா்கள் மற்றும் எண்ணற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது.தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு அடிப்படையில் இலவச தொலைக்காட்சியாக தற்சமயம் தொடக்கப்பட்டுள்ளது.24 மணி நேர ஒளிபரப்பு தொடக்கப்பட்டதும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றமடையலாம்.வடமாநிலங்களை பொறுத்தமட்டிலும் மிக முன்னனி நிறுவன பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி மிக வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அலைவரிசை சிக்னல் மிக எளிதான 6.8.10.12.16 பிட் சிபேன்ட் டிஷ் ஆன்டெனாகளில் கிடைக்கப்பெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment