துா்தா்ஷனின் டிடி பிரி டிஷ் சேவையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் டிடி பிரி முத்திரை(லோகோ)அறிமுகம்
இந்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுனமான துா்தா்ஷன் வழங்கும் வீடு தேடி வரும் டிடி பிரி டிஷ் இலவச இந்திய தொலைக்காட்சிகள் சேவையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.டிடி பிரி டிஷ் சேவையில் ஒளிபரப்பாகும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் டிடி பிரி டிஷ் டிடிஎச் சேவையின் புதிய முத்திரை(லோகோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இம்மாற்றம் டிடி பிரி டிஷ்யில்ஒளிபரப்பாகும் மூன்று அலைவரிசைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இனி வரக்கூடிய காலங்களில் இலவச ஒளிபரப்பு சேவையில் இடம்பெறும் தொலைக்காட்சிகள் அனைத்திலும் இப்புதிய முத்திரை இடம் பெறும்.இந்தியாவில் செயல்படும் மாற்ற தனியார் டிடிஎச் சேவை நிறுவனங்கள் இதே முறையில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.இதன் முலம் இந்தியாவின் டிடி பிரி டிஷ் இலவச தொலைக்காட்சிகளை தவறாக பயன்படுத்துவது முற்றிலும் தடுக்கபடும்.டிடி பிரி டிஷ் டிடிஎச் இந்திய அரசால் கடந்த 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கட்டணமின்றி இலவச தொலைக்காட்சிகளை அனைத்து தரப்பு மக்களும் காண கூடிய முறையில் தொடங்கப்பட்டு அடிதட்டு மக்களிடையே சிறந்த வரவேற்ப்பும் கிடைத்தது.அரசின் இச்சேவை முலம் மலைவாழ் மற்றும் எல்லை புற மக்களும் மிக பயன் அடைந்துள்ளனா் குறிப்பிடதக்கது.டிடி பிரி டிஷ் சேவையை மக்களிடையே கொண்டு சோ்க்கும் வகையில் புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை இணைத்து வருகிறது.தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அரசு தொலைக்காட்சியான டிடிபொதிகை டிவி மட்டும் டிடி பிரி டிஷ்யில் ஒளிபரப்பை வழங்கி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.
No comments:
Post a Comment