July 10, 2015
தந்தி செய்திகள் தொலைக்காட்சி இரவு நேர நேரலை செய்திகள் ஒளிபரப்பு தொடக்கம்
நண்பர்களே இந்திய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 24 மணி நேரமும் நேரலை செய்திகள் ஒளிபரப்பை ஜிலை 6 திகதி முதல் தொடங்கியுள்ளது தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான தந்தி தொலைக்காட்சி.கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்தொலைக்காட்சி தமிழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து இப்புதிய முயற்ச்சியில் இறங்கியுள்ளது தந்தி டிவி.தமிழகத்தை பொறுத்தமட்டிலும் செய்திகள் தொலைககாட்சிகள் வித்தியாசமான தொழில்நுட்பம் மற்றும் புதிய செயல்பாடுகளின் முலம் செய்திகளை வழங்க முயற்ச்சிகளை பேற்கொண்டு வருகிறது.தந்தி டிவியில் தொடக்க காலங்களில் காலை.பிற்பகல்.மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் செய்திகள் நேரலையாக நிகழ்வுகளை வழங்கி வந்தது.தற்சமயம் இரவு 12மற்றும் 2 மற்றும் 4 மற்றும் விடியற்காலை 6 வரை மாலை நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளை வழங்குகிறது.தந்தி டிவி இங்கிலாந்து நாட்டின் பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment