October 3, 2014
நீயூஸ்7(NEWS7 TAMIL) வேல்ட் கிளாஸ் புதிய செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட17யில் புதிய அலைவரிசையில் தொடக்கம் தமிழ்நாட்டில் செய்திகள் தொலைக்காட்சிகளின் வரிசையில் புதிய 24 மணிநேர செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது என கடந்த மாதத்தில் நமது தளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.இப்புதிய செய்திகள் தொலைக்காட்சிகான செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில்(3976) அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டிருந்தது.தற்சமயம் இப்புதிய நீயூஸ்7 செய்திகள் தொலைக்காட்சிகான ஒளிபரப்பு அதே இன்டல்சாட்17 செயற்கைகோளில் புதிய அலைவரிசையில்(3895) சோதனை ஒளிபரப்பு தொடக்கியுள்ளது.நீயூஸ்7 தொலைக்காட்சியின் செய்திகள் ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்புதிய தொலைக்காட்சி உலக தரத்தில் செய்திகளை வழங்கவுள்ளது.தமிழகத்தில் செய்திகள் தொலைக்காட்சி எண்ணிக்கை அதிகரித்தாலும் பொதுபடையான செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகளின் எண்ணிகை மிக குறைவுதான்.தொலைக்காட்சியை காண அதிநவின தொழில்நுட்பம் கொண்ட MPEG4/DVB S2 செட் டாப் பாக்ஸை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 10.12 அளவுள்ள டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.
புதிய அலைவரிசையின் விபரங்கள்:
Freq Rate 3895
Symbol Rate 13840
Polar Horizontal
Moulation Mpeg4/dvb s2
Mode Fta
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment