October 27, 2014
துபாய் ஹாலோ பன்பலை 106.5(RADIO SALAAM FM UAE) புதிய அலைவரிசையில் ஹாலோ சலாம் பெயரில் அமிரகத்தில் தொடக்கம்
அரேபிய நாடுகளில் பணிபுரியும் தமிழா்களின் பொழுது போக்கு அம்சமாக இந்தியாவின் தமிழ் வானொலி சேவை நிறுவனமான ஹாலோ எப்எம் மற்றும் துபாய் நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான புஜராத்தும் இணைந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியுள்ள வானொலி சேவையான ஹாலோ எப்எம்யை 89.5 அலைவரிசையில் துபாயில் அமிரகத்தில் தொடங்கியது.இப்பன்பலை சிறப்பான நிகழ்ச்சிகளை தமிழகத்தை போன்று வழங்கி வந்தது.தமிழகத்தில் ஹாலோ பன்பலை நேயர்களிடம் பெற்ற ஆதரவை போன்று துபாய் ஹாலோ எப்எம் துபாய் தமிழர்களிடம் வரவேற்பை பெற்றது.வானொலி துபாய் நாட்டின் அமிரகத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமயம் ஹாலோ எப்எம் நிறுவனம் தெலுங்கு மொழியில் புதிய பன்பலையை தொடங்கியுள்ளது. இப்புதிய ஹாலோ எப்எம் தெலுங்கு தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பன்பலையான ஹாலோ எப்எம் 89.5 அலைவரிசையில் மாற்றம் செய்யபடுவதையடுத்து.புதிய வடிவில் 24 மணி நேர தமிழ் நிகழ்ச்சிகளை புதிய அலைவரிசையான 106.5 யில் இனி ஹாலோ சலாம் என்ற பெயரில் கேட்டு மகிழலாம்.இம்மாற்றம் அக்டோபா் 26 திகதி முதல் தொடக்கியுள்ளது.துபாயில் தொடங்கிய முதல் தமிழ் வானொலி சேவை ஹாலோ எப்எம் நிறுவனத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வானொலி சேவைகள் இதுவாகும்.துபாயின் புதிய ஹாலோ சலாம் எப்எம் நிகழ்ச்சிகளை பாக்சாட்1ஆர் செயற்கைகோள் முலமாக உலகெங்கும் புஜராத் நிறுவனம் வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment