ஆந்திர மாநிலத்தில் அமைத்திருக்கும் உலக பிரசித்தி பெற்ற தமிழ் கடவுளான திருப்பதி திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வரா ஆலயத்தின் சாா்பாக தமிழ் மொழியில் புதிய தொலைக்காட்சி ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் 2 தமிழ் உலகளாவிய ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.திருப்பதியில்
நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை கடந்த பல வருடங்களாக ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் தெலுங்கு மொழிீயில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியின் முலம் ஒளிபரப்பாகியது.தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றுவதன் முலம் நேரடி நிகழ்ச்சிகளின் வருணை தொகுப்பை தமிழ்.ஆங்கிலம்.ஹிந்தி.கன்னடம்.தெலுங்கு.மலையாளம் போன்ற
மொழிகளில் ஒளிபரப்பாகிறது.தமிழ் மொழியில் ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் தொடங்குவதற்கான ஒளிபரப்பு உாிமத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் விண்ணப்பம் செய்திருந்தது.தற்சமயம் அதற்கான அனுமதி கிடைக்க பெற்றதை அடுத்து தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஸ்ரீ வேங்கடேஸ்வரா தெலுங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவாிசையில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு நிறைவடைந்து 24 மணி நேர தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கப்படலாம். தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 அடி முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம்.இலவச ஒளிபரப்பாக இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கும் இரண்டாவது தொலைக்காட்சி ஸ்ரீ வேங்கடேஸ்வரா தமிழ்.
அலைவாிசை விபரங்கள்
Satellite Insat4A@83.0E(C-Band)
Freq Rate 3769
Symbol Rate 3000
Polar Horizontal
Modulation MPE4/DVB S2(8PSK)
Mode FTA
No comments:
Post a Comment