இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் கட்டாய டிஜிட்டலாக்கத்தில் அதிக பயன் பெற்று வருவது DTH ஆப்ரேட்டர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட மாநிலங்களில் தற்போது முடிவிற்கு வந்துள்ள டிஜிட்டலாக்க 3 ஆம் கட்டத்தின் முடிவின்விளைவாக ஜனவரி மாதத்தில் முன்னணி ஆபரேட்டர்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது. ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 62 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக குரோம் டேட்டா அனலிட்டிக்ஸ் & மீடியா தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் DTH சந்தாதாரர்களின் சதவீதம் ஜனவரி மாதத்தில் சுமார் 54சதவீதமாக அதிகரித்துள்ளது... கிட்டத்தட்ட DTH ஊடுருவலே இல்லாத மேற்கு வங்கத்தில்,தற்போது 42 சதவீதம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் ஜம்மு காஷ்மீர், மாநிலத்தில் 22 சதவிகிதமாக இருந்த DTH சந்தாதாரர்களின் எண்ணிக்கை தற்போது 61 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலை பீகார் மாநிலத்திலும் DTH சந்தாதாரர்கள் ஒரு 32 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் 13 சதவீதமாக இருந்த டிடிஎச் ஊடுருவல் இப்போது 45 சதவீதம் என அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் சந்தாதாரர்களின் தளம் ஒரு 31 சதவீதம் அதிகரித்து தற்போது டிடிஎச் ஊடுருவல் 34 சதவீதமாக உள்ளது.. ஜனவரியுடன் முடிவுற்ற மாதத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 22 சதவீதம் உயர்வு 39 சதவிகிமாக உள்ளது. கர்நாடகவில் டிடிஎச் சந்தாதாரர்களின் தளம் 21 சதவீதமாக உள்ளது மாநிலத்தில் அதன் டிடிஎச் ஊடுருவல் சுமார் 12 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவா 11 சதவீதம்அதிகரித்து 21 சதவீதமாக தற்போது தக்கவைத்துள்ளது.
மற்ற பிற மாநிலங்களில் 4 முதல் 10 சதவிகிதம் அளவிற்கு DTH சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதன் விவரங்கள் பின் வருமாறுஉத்திரபிரதேசம் - 78 சதவீதம், அரியானா - 32 சதவீதம், ராஜஸ்தான் - 41 சதவீதம், பஞ்சாப் - 22சதவீதம் மற்றும் உத்தரகண்ட் – 45. ஜூன் 30 2015 உடன் முடிவுற்ற மாதத்தில் சுமார் 78.74 மில்லியன் பதிவு செய்த டிடிஎச் சந்தாதாரர்கள் உள்ளனர் எனவும்... அதில் சுமார் 39.74 மில்லியன் இணைப்புகள் மட்டுமே செயலில் இருந்த சந்தாதாரர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள நிறுவனம்... இந்தியாவில் ஆறு முன்னணி தனியார் DTH ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்படும் இந்த சேவையில் அக்டோபர் 2015 வரை, இவர்களின் சந்தைப் பங்கு: டிஷ் டிவி - 27 சதவீதம், டாடா ஸ்கை - 20 சதவீதம், ஏர்டெல் டிஜிட்டல் - 19 சதவீதம், வீடியோகான் d2h - 16 சதவீதம், சன் டைரக்ட் - 12 சதவீதம் மற்றும் பிக் டிவி - ஆறு சதவீதம்.
டிசம்பர் 31, 2015 என முடிவுற்ற மாதத்தில், டிஷ் டிவி இன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 1.4 கோடியாக உயர்ந்துள்ளது, வீடியோகான் d2h ல் சந்தாதாரர்கள் 1.13 கோடியாகவும்... ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் சுமார் 1.11 கோடி சந்தாதாரர்கள். எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் டாடா ஸ்கை, சன் டைரக்ட் மற்றும் மற்றும் பிக் டிவி ஆகியவற்றில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் அறியப்படவில்லை. 3 ஆம் கட்ட டிஜிட்டல் அமலாக்கத்தில் ஐந்து மாநிலங்களில் உயர் நீதிமன்றகளில் தடை மற்றும் செட் டாப் பாக்ஸ்கள் (STBs) பற்றாக்குறை என்ற போதிலும்... நாடு முழுவதும் டிடிஎச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆப்ரேட்டர்களுக்கு மற்றும் பெரிய டிஜிட்டல் MSO நிறுவனகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களின் முதலீடு என்பது ஒரு முறை மட்டுமே... தற்போது அவர்கள் DTHஇல் முதலீடு செய்து செட் டாப் பாக்ஸ் பெற்றார்கள் என்றால்... அவர்களை திரும்ப கேபிள் டிவி க்கு அழைத்து வருவது என்பது ... மிகவும் கடினம் மேலும் அதற்காக ஏற்படும் கால விரையம் மற்றும் பண விரையத்தை சிறிய ஆப்ரேட்டர்களால் ஈடு செய்ய இயலாது என்பதே மீடியா ஆய்வாளர்களின் கருத்து.
No comments:
Post a Comment