October 8, 2015
ஜெயா மேக்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி ஒளிபரப்பு
தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான ஜெயா டிவி குழுமத்தின் 24 மணி நேர மியூசிக் தொலைக்காட்சியான ஜெயா மேக்ஸ் முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் 2015 ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர்களை தமிழ் வருணையுடன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இப்போட்டி தொடர்களை ஒளிபரப்புவதற்கான அனுமதியை இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.தமிழகத்தில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் முதன்முறையாக விளையாட்டு போட்டி தொடர்களை தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது முதல்முறையாகும்.கடந்த சில வருடங்களாக தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பி மக்களின் வரவேற்ப்பினை பெற்றுவருகின்றன.ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியை பொருத்தமட்டிலும் தமிழ் திரைப்பாடல்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கி வரும் நிலையில் இப்புதிய முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது தமிழ் கால்பந்து ரசிகர்களின் வரவேற்ப்பை பெறும் வகையில் அமைந்துள்ளது.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் விளையாட்டு போட்டி தொடர்களை தமிழகத்தின் ஜெயா தொலைக்காட்சியுடன் ஒளிபரப்பு செய்வது இதுவே முதன்முறையாகும்.தமிழகத்தில் ஸ்டார் டிவி நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியாக விஜய்டிவி செயல்படுவது குறிப்பிடதக்கது.கடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை தமிழ் வருணையுடன் தமிழகத்தில் ஒளிபரப்பியிருந்தது குறிப்பிடதக்கது.ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.போட்டிகளை கேபிள் மற்றும் டிடிஎச் முலமாக ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment