October 31, 2015
சஹானா மியூசிக் தமிழ் மீண்டும் இன்டல்சாட்17 யில் தொடங்கியது
சஹானா மியூசிக் தமிழ் மீண்டும் இன்டல்சாட்17 யில் தொடங்கியது
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate 3966 H
Symbol Rate 14400
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
October 25, 2015
இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது சன் டிவி
பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்களில் சன் டிவி, இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி மையம் வாராவாரம் முதல் 10 இடங்கள் பிடித்தவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி, கடந்த 41ஆவது வாரத்தின் முடிவில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சன் தொலைக்காட்சியை 41ஆவது வாரத்தில் 11 இலட்சத்து 53 ஆயிரத்து 449 பேர் கண்டுகளித்துள்ளனர்.
அதற்கு அடுத்தப்படியாக ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த தொலக்காட்சியை 9 இலட்சத்து 2 ஆயிரத்து 574 பேர் பார்த்துள்ளனர். முதல் 10 இடத்தை ஒளிபரப்பு நிறுவனங்கள்:
1.சன் டிவி [Sun TV] – 11,53,449
2. ஸ்டார் ப்ளஸ் [Star Plus] – 9,02,574
3.கலர்ஸ் [Colors] – 7,76,135
4. ஜீ டிவி [Zee TV] – 6,73,430
5.ஜீ அன்மோல் [Zee Anmol] – 6,11,550
6. ஸ்டார் கோல்ட் [Star Gold] – 5,46,919
7.ஸ்டார் உட்சவ் [Star Utsav ] – 5,04,338
8. லைஃப் ஓகே [Life OK] – 4,91,802
9.ஈடிவி தெலுங்கு [ETV Telugu] – 4,47,160
10.ஜீ சினிமா [Zee Cinema] – 4,27,533
October 15, 2015
October 8, 2015
ஜெயா மேக்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி ஒளிபரப்பு
தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான ஜெயா டிவி குழுமத்தின் 24 மணி நேர மியூசிக் தொலைக்காட்சியான ஜெயா மேக்ஸ் முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் 2015 ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர்களை தமிழ் வருணையுடன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இப்போட்டி தொடர்களை ஒளிபரப்புவதற்கான அனுமதியை இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.தமிழகத்தில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் முதன்முறையாக விளையாட்டு போட்டி தொடர்களை தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது முதல்முறையாகும்.கடந்த சில வருடங்களாக தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பி மக்களின் வரவேற்ப்பினை பெற்றுவருகின்றன.ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியை பொருத்தமட்டிலும் தமிழ் திரைப்பாடல்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கி வரும் நிலையில் இப்புதிய முயற்ச்சியில் களம் இறங்கியுள்ளது தமிழ் கால்பந்து ரசிகர்களின் வரவேற்ப்பை பெறும் வகையில் அமைந்துள்ளது.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் விளையாட்டு போட்டி தொடர்களை தமிழகத்தின் ஜெயா தொலைக்காட்சியுடன் ஒளிபரப்பு செய்வது இதுவே முதன்முறையாகும்.தமிழகத்தில் ஸ்டார் டிவி நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியாக விஜய்டிவி செயல்படுவது குறிப்பிடதக்கது.கடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை தமிழ் வருணையுடன் தமிழகத்தில் ஒளிபரப்பியிருந்தது குறிப்பிடதக்கது.ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.போட்டிகளை கேபிள் மற்றும் டிடிஎச் முலமாக ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் காணலாம்.
October 5, 2015
ராயல் டிவி(ROYAL TV TAMIL)தமிழ் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்பை இன்டல்சாட்17 யில் தொடங்கியது
கடந்த வருடத்தில் திருச்சி ஆக்ரோ ராயல் டையரி பாா்ம்ஸ் நிறுவனத்தினரால் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ராயல்டிவி தமிழ் தொலைக்காட்சி மீண்டும் தங்களின் செயற்கைக்கோள் ஒளிபரப்பை தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தொலைக்காட்சியான ஆந்திரி வெல்நஸ் ஒளிபரப்பு உரிமத்தில்தொடங்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு சாதனா மற்றும் சக்தி டிவி ஹிந்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தின் முலமாக தமிழகத்தில் சில மாதங்களாக சோதனை தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது.பின்பு ஒளிபரப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டுயிருந்தது.ராயல்டிவி முதன்முதலாக தொடங்கப்பட்ட இன்சாட்4எ செயற்கைகோளில் மீண்டும் தன் ஒளிபரப்பை தொடங்கியிருப்பது குறிப்பிடதக்க விடையாமாகும்.தற்சமயம் மிக தெளிவான ஒளிபரப்பை சக்திடிவியின் முலம் வழங்கிவருகிறது.இலவச ஒளிபரப்பாக ராயல் டிவி இன்டல்சாட்17யில்தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate 3876
Symbol Rate 14300
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
Satellite Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate 3876
Symbol Rate 14300
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
Subscribe to:
Posts (Atom)