June 8, 2015
இனிமேல் சன் டிவி ஒளிபரப்பு கிடையாது ?? பெண்களுக்கு வந்து இருக்கும் புதிய சோதனை
சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்த சேனல்களின் ஒளிபரப்பு உரிமை ரத்தாகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிப்பது கட்டாயமாகும். சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீதான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், மத்திய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஏற்கனவே அவர்களின் வானொலி ஒலிபரப்புக்கும் இது போல் நடவடிக்கை எடுத்தது. சன் குழுமத்தின் பெரும்பாலான சேனல்களுக்கு 2021 வரை ஒளிபரப்பு உரிமம் உள்ளது. அதனால் அது வரை எந்த பிரச்சனையும் இருக்காது. அதன் பிறகு ஒளிபரப்ப தடை விதிக்கப்படலாம். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் சன் குழுமத்தின் பங்குகள் 28 சதவீதம் சரிந்துள்ளது. இந்த செய்தி பெண்களுக்கு அதிர்ச்சியாகி உள்ளது. சன் டிவியின் இந்த வளர்ச்சிக்கு காரணம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான், அவர்களுக்கு என சீரியல்களை ஒளிபரப்பி எல்லா சேனல்களையும் முந்தி டாப் ஆனது. இந்த செய்தியை கேள்விப்பட்டு சன் டிவி ஒளிபரப்பு உடனடியாக தடைப்பட்டு விடுமோ என கவலையில் உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment