April 8, 2015
சோனி கிஸ் தொலைக்காட்சியில் பெப்சி ஐபிஎல் தொடர்கள் தமிழ் வருணையில் ஒளிபரப்பு
இந்தியா மற்றும் உலக நாடுகளின் நட்சத்திர மட்டைபந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் மிக பிரபலமான மட்டைபந்து தொடர்ரான பெப்சி ஐபிஎல் போட்டி தொடர்களை முதன்முறையாக தமிழ் மொழியில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது சோனி குழுமத்தின் புதிய தொலைக்காட்சியான சோனி கிஸ் டிவி.இப்புதிய தொலைக்காட்சி கடந்த மாதத்தில் செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்20@68.0E யில் தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.இப்போட்டி தொடர்களை சோனி நிறுவனத்தின் விளையாட்டு தொலைக்காட்சியான சோனி சிக்ஸ்யில் ஆங்கிலத்திலும்.சோனி மேக்ஸ்யில் ஹிந்தி மொழியிலும் ஒளிபரப்புகிறது.சோனி நிறுவனம் கடந்த வருடங்களில் நடைபெற்ற ஐபிஎல் மட்டைபந்து போட்டி தொடர்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டு்ம் இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது.சோனி நிறுவனத்தின் புதிய முயற்ச்சியாக தமிழ் மட்டைபந்து ரசிகர்களின் வரவேற்பை பெறும் வகையில் இப்புதிய தொலைக்காட்சியை தமிழகத்தில் களம் இறக்கியுள்ளது.இதே போன்று தற்சமயம் நடைபெற்ற உலககோப்பை போட்டி தொடர்களை தமிழ் மொழியில் ஸ்டார் டிவி நிறுவனத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கியிருந்தது குறிப்பிடதக்கது.இப்புதிய தொலைக்காட்சி மற்ற டிடிஎச் மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களில் விரைவில் ஒளிபரப்பு தொடங்கலாம்.இன்டல்சாட்20 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment