நியூஸ் 7 (NEWS7 TAMIL) புதிய தமிழ் செய்தி தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்17ல் தொடக்கம்
நண்பர்களே தமிழகத்தின் செய்திகள் தொலைக்காட்சிகளின் வரிசையில் நிண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் புதிய 24 மணிநேர தமிழ் தொலைக்காட்சி நியூஸ் 7 என்ற பெயரில் தொடக்கப்படவுள்ளது.இப்புதிய தொலைக்காட்சிக்கான செயற்கைகோள் சோதனை ஒளிபரப்பு தமிழ்தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல் சாட்17@66.0Eயில் ஹைத்ரபாத் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தில் இருந்து தொடக்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிக்கான 24 மணிநேர ஒளிபரப்பு விரைவில் இன்டல்சாட்17லில் இவ்வருடத்தின் இறுதிக்குள் தொடக்கலாம்.நியூஸ்7 தொலைக்காட்சிகான பணியிட அறிவிப்புகள் அந்நிறுவனத்தின் இணையதளத்தில்(www.n7.tv) வெளியிடப்பட்டுள்ளது.தற்சமயம் கலர் கோடுகளுடன் காட்சியளிக்கும் நியூஸ் 7 தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தது 8 அடி அல்லது அதற்கு மேற்பட்ட டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்துவதன் முலம் அலைவரிசையை பெறலாம்.
அலைவரிசை விபரங்கள்
Freq Rate 3876
Symbol Rate 14300
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta
No comments:
Post a Comment