டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

November 22, 2015

D2H லைப் 4கே(D2H LIFE UHD 4K) புதிய அல்ட்ர யூஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு ST2@88.0E தொடக்கம்



நண்பர்களே இந்தியாவின் மிக பிரபலமான டிடி ஹெச் சேவையான வீடியோகான் டிடிஎச் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவிற்கான அதிநவின தொலைக்காட்சியான D2H லைப் அல்ட்ரா ஹெச்டி 4கே என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இந்தியாவில் அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி தொடங்கிய முதல் டிடிஎச் நிறுவனம்
இதுவாகும்.தற்சமயம் இலவச ஒளிபரப்பாக எஸ்டி2 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.மிக தெளிவான விடியோ மற்றும் ஆடியோ தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இந்தியாவை பொருத்தமட்டிலும் கடந்த வருடம் முதல் சில முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என்று புதிய ஹெச்டி தொலைக்காட்சிகளை தொடங்கி வருகின்றனர்.அவ்வரிசையில் டிடிஎச் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப தொலைக்காட்சிகளை நிறுவனங்களின் சார்பாக தற்சமய காலங்களில் தொடங்கி வருவது குறிப்பிடதக்கது.D2H லைப் 4கே தொலைக்காட்சி தற்காலிக சோதனை ஒளிபரப்பின் அடிப்படையில் இலவச ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ளது.எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றப்படலாம்
அலைவரிசை விபரங்கள்:
Satellite ST2@88.0E(KU BAND)
Freq Rate 11483
Symbol Rate 44997
Polar Horizontal
Modulation HEVC/UHD MPEG4/DVB S2
Mode FTA

November 20, 2015

துர்தர்ஷன் குழும தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளான ஜிசாட்10@83.0Eயில் தொடக்கம்



நண்பர்களே இந்திய அரசின் பொது தொலைக்காட்சி சேவையான பிரசார் பாரதியின் டிடி நேஷனல் டிடி ஹெச்டி டிடி நியூஸ் டிடி ஸ்போர்ட்ஸ் டிடி பாரதி டிடி கிஷான் மற்றும் சில டிடி தொலைக்காட்சிகளின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளான ஜிசாட்10யில் தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட இப்புதிய செயற்கைகோளில் இந்தியா அரசின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்சாட்3எ செயற்கைகோளில் ஒளிபரப்பை வழங்கி வந்தநிலையில் அச்செயற்கைகோளின் பயன்பாடு முடிவடையும் நிலையில் இப்புதிய செயற்கைகோளுக்கு தொலைக்காட்சிகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதே அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பை அந்தமான் தீவுகளுக்கான டிடி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு இடைநிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள புதிய அலைவரிசையின் சிக்னல் 6 முதல் 16 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கும்.மேலும் எளிய தொழில்நுட்ப வசதியுடைய MPEG2/DVB S1 செட் டாப் பாக்ஸ்யில் தொலைக்காட்சிகளை காணலாம்.விரைவில் மற்ற மாநில மொழி டிடி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பும் ஜிசாட்10 செயற்கைகோளில் தொடங்கலாம்.இப்புதிய ஒளிபரப்பு வளைகுடா மற்றும் கிழக்காசியா போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும்.துர்தர்ஷனின் அதிநவின தொலைக்காட்சியான டிடி ஹெச்டிம் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்
Satellite GSAT10@83.0E(C BAND)
Freq Rate 3885
Symbol Rate 27500
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s1
Mode FTA

November 18, 2015

பேஷன்1 டிவி அல்ட்ர ஹெச்டி 4கே தொலைக்காட்சி ஒளிபரப்பு




பேஷன்1 டிவி அல்ட்ர ஹெச்டி 4கே தொலைக்காட்சி ஒளிபரப்பு UHD MEASAT3/3A@91.2E சோதனை ஒளிபரப்பு தொடக்கம்
இத்தொலைக்காட்சிகளை காண அதிநவின வசதியுடைய அல்ட்ரா ஹெச்டி செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்
Satellite Measat3/3A@91.2E(C-BAND)
Freq Rate 4121
Symbol Rate 30000
Polar Horizontal
Modulation UHD.MPEG4/DVB S2
Mode FTA

November 17, 2015

இந்தியாவில் முதன்முறையாக இன்சைட் அல்ட்ர ஹெச்டி 4கே தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்சாட்4A@83.0யில் உதயம்


நண்பர்களே இந்தியாவின் முதல் அதிநவின தொழில்நுட்பம் கொண்ட அல்ட்ர ஹெச்டி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முதன்முறையாக இந்தியா செயற்கைகோளான இன்சாட்4எ யில் இன்சைட் டிவி 4கே என்னும் தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளது.உத்திர பிரதேசம் மாநிலம் நெய்டாவில் செயல்படும் NSTPL செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலக நாடுகளின் கலச்சார தொடர்புடைய நிகழ்ச்சிகளை ஆங்கில மொழியில் வழங்குகிறது.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் யூஹெச்டி 4கே தொலைக்காட்சி இதுவாகும்.முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்கள் இருப்பினும் தனிப்பட்ட முறையில் அதிநவின தொலைக்காட்சியை இன்சைட் டிவி தொடங்கியுள்ளது.இன்சைட் டிவி உலக அளவில் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை இந்தியா நியூஸ் ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சி நிறுவனத்தின் முலம் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இன்சைட் டிவி இலவச ஒளிபரப்பாக இன்டல்சாட்20 மற்றும் இன்சாட்4எ யில் தொடங்கப்பட்டுள்ளது.யுஹெச்டியின் ஒளிபரப்பை காண யுஹெச்டி தொழில்நுட்ப வசதி கொண்ட செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.வரக்கூடிய காலங்களில் யுஹெச்டி தொலைக்காட்சிகள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறைகளிலும் தொடங்கப்படலாம். 
அலைவரிசை விபரங்கள்
Satellite Insat4A@83.0E (C-BAND)
Freq Rate 3725
Symbol Rate 26666
Polar Horizontal
Modulation 4K UHD/DVB S1
Mode FTA

NEW CHANNEL


PBC TV
EuroSat 70B @70'5E
FREQ:11294 H 44900
MPEG4 FTA

November 16, 2015

ஆசியாவின் முதல் தமிழ் அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்70B@70.5Eயில் உதயம்


நண்பர்களே தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக அதிநவின தொழில்நுட்ப வசதியுடைய அல்ட்ரா ஹெச்டி வடிவில் புதிய தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பை தற்காலிக அடிப்படையில் ஜெர்மனி நாட்டின் ஹெரிஜான் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோள் முனையத்தின் முலம் யூடெல்சாட்70பி செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.ஆசியாவில் முதன்முறையாக தமிழ் நிகழ்ச்சிகளை வழங்ககூடிய அதிநவின தொழில்நுட்ப அல்ட்ரா ஹெச்டி தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது வரவேற்க்கதக்கது.தற்சமயம் ஒரு குறிப்பிட்ட திரைப்பாடல்களுடன் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.ஜெர்ரி அல்ட்ரா ஹெச்டி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.யூடெல்சாட்70 செயற்கைகோளில் தற்சமயம் மூன்று அல்ட்ரா தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர். இத்தொலைக்காட்சிகளை காண அதிநவின வசதியுடைய அல்ட்ரா ஹெச்டி செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.இத்தொலைக்காட்சி வளைகுடா.ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கான பிரத்தியோக சோதனை ஒளிபரப்பு தொலைக்காட்சியாகும்.இலவச தொலைக்காட்சியாக தமிழ் அல்ட்ரா ஹெச்டி யூடெல்சாட்70பியில் ஒளிபரப்பாகிறது. அலைவரிசை விபரங்கள்:
Satellite Eutelsat70B@70.5E(KU-Band)
Freq Rate 11355
Symbol Rate 45000
Polar Vertical
Modulation UHD/MPEG4/DVB S2
Mode FTA

November 15, 2015

நீயூஸ்7(NEWS7 TAMIL) தமிழ் செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்17@66.0eயில் புதிய அலைவரிசைக்கு மாற்றம்


நண்பர்களே தமிழ்நாட்டில் செய்திகள் தொலைக்காட்சிகளின் வரிசையில் புதிய 24 மணிநேர செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது என கடந்த மாதத்தில் நமது தளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது நீயூஸ் 7 செய்திகள் தொலைக்காட்சிகான செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில்(3966) அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.கடந்த சில வருடங்களாக ஐதராபாத் டெலிஷ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் செயற்கைகோள் ஒளிபரப்பை தமிழகம் மற்றும் ஆசியா நாடுகளுக்கு வழங்கி வந்தது.தற்சமயம் சென்னை டெலிஷ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் மற்றொரு அலைவரிசையில் இத்தொலைக்காட்சி செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது இத்தொலைக்காட்சியை காண அதிநவின தொழில்நுட்பம் கொண்ட MPEG4/DVB S2 செட் டாப் பாக்ஸை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 10.12 அளவுள்ள டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.
புதிய அலைவரிசையின் விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3966
Symbol Rate 14400
Polar Horizontal
Moulation Mpeg4/dvb s2
Mode FTA

நம்பிக்கை டிவி( NAMBIKKAI TV ) புதிய தமிழ் கிருத்துவ தொலைக்காட்சி தமிழகத்தில் இன்டல்சாட்17யில் உதயம்


நண்பர்களே தமிழகத்தின் புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி நம்பிக்கை டிவி என்ற பெயரில் புதிதாக செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.ஆந்திர மாநிலத்தை மையமாக கொண்டு செயல்படும் சுபவார்தா தெலுங்கு கிருத்துவ தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. முற்றிலும் தமிழ் தொடர்பான கிருத்துவ ஆராதனை மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.சுபவார்தா டிவி நிறுவனத்தின் தென் மாநிலத்திற்கான முன்றாவது தொலைக்காட்சி இதுவாகும்.ஆந்திர மாநிலத்தின் ஆர் டிவியின் ஒளிபரப்பு உரிமத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.நம்பிக்கை தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.தமிழகத்தில் கிருத்துவ தமிழ் தொலைக்காட்சிகளின் தொடக்கம் தமிழ் கிருத்துவ மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுவருகின்றன.நம்பிக்கை தொலைக்காட்சி இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகி வருகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satellite Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate 3895
Symbol Rate 13840
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

November 13, 2015

சாய்ராம் டிவி (SAIRAM TV) புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் இன்டல்சாட்17யில் உதயம்


நண்பர்களே தமிழகத்தின் புதிய பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சி சாய்ராம் டிவி என்ற பெயரில் உதயமாகியுள்ளது.சாய்ராம் டிவியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.சென்னையை மையமாக கொண்டு செயல்படும் 
சாய்ராம் இன்ஸ்டியூட் கல்வி நிறுவனத்தின் சார்பாக இத்தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துர் சேனாங்கோட்டையில் செயல்படும் சாய்ராம் தொழிற்பயிற்ச்சிகூடமும் சாய்ராம் தொலைக்காட்சியின் அங்கமாகும்.சாய்ராம் டிவிக்கான செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமம் கடந்த வருடத்தில் வழங்கப்பட்டது.தொலைக்காட்சியின் 24 மணிநேர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்படலாம்.சாய்ராம் டிவியின் ஒளிபரப்பு டாடா கம்னியூகேஷன் நிறுவனத்தின் சென்னை டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் ஒளிபரப்படுகிறது.தொலைக்காட்சியி்ன் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் மிக எளிய தொழில்நுட்ப வசதி கொண்ட MPEG4/DVB S செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.சாய்ராம் தொலைக்காட்சி இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17 ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3845
Symbol Rate 27689
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s
Mode Fta

November 6, 2015

பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஹெச்டி ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பு ஆசியாசாட்5@100.5E


நண்பர்களே பாக்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் சேனல்ஸ் நிறுவனத்தால் தெற்காசிய மற்றும் சீனா போன்ற நாடுகளுக்காக தொடங்கப்பட்ட ஆங்கில அதிரடி திரைப்பட தொலைக்காட்சியான பாக்ஸ் ஆக்ஸன் மூவிஸ் ஹெச்டி தற்காலிக இலவச தொலைக்காட்சியாக ஆசியாசாட்5 செயற்கைகோளில்
ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் அனைத்தும் எவ்வித விளம்பர இடைவெளியின்றி ஒளிபரப்பாகிறது.அனைத்து பகுதிகளிலும் தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசை சிக்னல் 6 மற்றும் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.இத்தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் இடைநிறுத்தம் செய்யலாம்.மிக துல்லியமான வீடியோ மற்றும் ஆடியோ தரத்தில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்
Satellite Asiasat5@100.5E(C-Bnad)
Freq Rate 4040
Symbol Rate 29720
Polar Horizontal
Modulation HD.Mpge4/Dvb s2
Mode Fta/Pay